நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் ஆயிரக்கணக்கான படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை ‘ஆச்சி’ மனோரமாவுக்கு இருதினங்களுக்கு முன்பு மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து அவர் தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இப்போது இவரது நிலை இன்னமும் கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். அடுத்து 48 மணித்தியாலத்திற்கு இவர் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருப்பார் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கெனவே ஒரு தடவை மிக அவதிப்பட்டு வைத்தியசாலையிலிருந்து தீவிர சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியிருந்தார் ஆச்சி.
மனோரமாவுக்கு ஏற்கனவே நீரிழிவு, மூட்டுவலி, உடல் உபாதைகள் இருந்ததாகவும் இப்போது இவருக்கு சீறுநீரக பாதிப்பும் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் இவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தமிழ்த் திரையுலகில் தனக்கென நிரப்ப முடியாத ஒரு இடம் கொண்ட மனோரமாவின் உடல்நிலை மீண்டும் வழமைக்கு திரும்ப வேண்டுமென்பதே அனைவரினதும் பிரார்த்தனை.