அவசரமாக கூடிய அமைச்சரவை: பாதீட்டிற்கு அங்கீகாரம்

நல்லாட்சி அரசாங்கத்தினால் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு – செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், வரவு செலவுத் திட்டத்திற்கென இன்று முற்பகல் விசேடமாக கூடிய அமைச்சரவையில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் நிதியாண்டுக்கான குறித்த வரவு செலவுத் திட்டம் தொடர்பில் சலக தரப்பினரிடையேயும் பெரும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில், குறித்த வரவு செலவுத் திட்டம் சகல தரப்பினருக்கும் நன்மையளிக்கும் வகையில் அமையுமென நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts