அழகியல் பாடங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை

014 copyயாழ். கோப்பாய் கல்வியற் கல்லூரியில் கடந்த வருடங்களில் நிறுத்திவைக்கப்பட்ட அழகியல் பாடங்களுக்கான பயிற்சிநெறிகளை எதிர்காலத்தில் ஆரம்பிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென வடமாகாண கல்வி பண்பாட்டு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.

கோப்பாய் கல்வியற் கல்லூரி பீடாதிபதி சதாசிவம் அமிர்தலிங்கம் தலைமையில் செ.கமலநாதனின் ‘முதுசம்’ நாடக நூல் வெளியீடும் ‘கூலி’ குறுந்திரைப்பட வெளியீடும் கல்வியற் கல்லூரி மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அழகியல் பாடங்களுக்கான ஆசிரியர்கள் போதியளவில் பாடசாலைகளில் காணப்படுகின்றனர் ஆனால் கணிதம், விஞ்ஞானம் பாடங்களுக்கு ஆசிரியர்கள் குறைவாகவே உள்ளனர்.

இதனால் அழகியல் பாடங்களுக்கு பதிலாக கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கு கோப்பாய் கல்வியற் கல்லூரியில் மாணவர்களை இணைத்துகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும் கணிதம், விஞ்ஞானம் பாடங்களுக்கு எதிர்பார்த்தளவு மாணவர்கள் விண்ணப்பிக்காத நிலையில் மீண்டும் நடனம், நாடகம் மற்றும் சங்கீதம் உள்ளிட்ட அழகியல் பாடங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ள வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார்.

Related Posts