அல்லைப்பிட்டி,வட்டுக்கோட்டையில் சடங்கள் மீட்பு

body_foundயாழ். பல்கலைக்கழகத்தில் நுண்கலைத்துறையில் 3 ஆம் வருடத்தில் கல்விப்பயிலும் அல்லைப்பிட்டியைச்சேர்ந்த 24 வயதான ரட்ணேஸ்வரன் வித்யா என்ற மாணவி அவருடைய வீட்டிலிருந்து இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

தூக்கில் தொங்கிய நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்த பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை வட்டுக்கோட்டை – பொன்னாலை வீதியில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகிலிருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியோரமாக முகம் நிலத்துடன் முட்டும் வகையில் காணப்பட்ட இச்சடலம், சித்தங்கேணியைச் சேர்ந்த கதிரமலை கார்த்திகேசு (வயது 51) என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இயற்கைக் கடன் கழிப்பதற்காக வீதியோரமாக சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு இந்த வயோதிபர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Posts