அலைபேசியூடாக தேர்தல் பிரசாரம் செய்வதை தவிர்க்கவும்

சந்தாதாரர்களின் சம்மதமின்றி அலைபேசி வலையமைப்புகளூடாக தேர்தல் பிரசாரம் செய்வதை தவிர்க்குமாறு சகல வேட்பாளர்களிடமும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கேட்டுக்கொண்டுள்ளார்.

mahintha-thesappireya

வாக்களிப்புக்கு 48மணிநேரத்துக்கு முன்னளர் செய்யப்படும் இவ்வாறான பிரசாரங்கள் தேர்தல் சட்டங்களை மீறியதாக கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

அரசியல் கட்சிகளையும் வேட்பாளர்களையும் ஆதரிக்கும் குறுஞ்செய்திகளை அனுப்பும் திட்டமிட்ட செயற்பாடுகள் பற்றி முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

Related Posts