அலுகோசுப் பதவிகளுக்கான நேர்முகப் பரீட்சைகள்

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை தூக்கிலிடுவதற்கான அலுகோசு பதவிகளுக்கு சுமார் 150 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் இவர்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் நடைபெறுவதகாவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்றும் நேற்று முன்தினமும் மூவர் கொண்ட குழுவொன்றினால் நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டன.

இப்பதவிக்கான பிரதான தகுதி உள மற்றும் உடல் திடல்நிலையாகும். முன்னர் இப்பதவியை வகித்தவர்கள் 8 ஆம் வகுப்புவரை கல்வி கற்றிருந்தனர்.

தூக்கிலிடுபவர் மற்றும் அவரின் உதவியாளர் ஆகிய இரு நபர்களை 178 விண்ணப்பதாரிகளிடமிருந்து சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவுசெய்யவுள்ளது.

இலங்கை சட்டத்தின்படி மரண தண்டனை விதிக்கபட்டாலும் 1976 ஆம் ஆண்டின்பின் மரண தண்டனைகள் அமுல்படுத்தப்படவில்லை.

அண்மைக்காலமாக குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதையடுத்து மரண தண்டனைக்கான அவசியம் பலரால் வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போது சிறைச்சாலைகளில் 357 மரண தண்டனை கைதிகள் உள்ளனர். இவர்களில் சிலர் 15-20 வருடங்களாக சிறையில் உள்ளனர்.

Related Posts