அறுவடை இயந்திரப் பாவனைக்கு கடும் எதிர்ப்பு

vayalஅரியாலை வயல்களில் நெல்அறுவடைப் பணிக்கு இயந்திரத்தைப் பயன்படுத்துவதற்கு அரிவுவெட்டும் தொழிலாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

அரியாலை கிழக்கு மற்றும் செம்மணிப் பகுதி வயல்களில் விளைந்த நெற்பயிர்கள் இயந்திரங்களின் உதவியுடன் அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. இதனையடுத்து அந்தப் பகுதியில் ஒன்று கூடிய அரிவு வெட்டும் தொழிலாளர்கள் இயந்திரம் மூலம் அறுவடை மேற்கொள்வதற்குத் தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன் இந்த நடவடிக்கையால் தமது நாளாந்த வருமானம் இழக்கப்படுவதாகவும் தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

இதனை அடுத்து அந்தப் பகுதியில் அறுவடைத் தொழிலில் ஈடுபட்டிருந்த இயந்திரங்களை அங்கிருந்து அகற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

Related Posts