வடக்கு மாகாண சபையின் 121ஆவது அமர்வு, பிரதி அவைத்தலைவர் வல்லிபுரம் கமலேஷ்வரன் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.
வடக்கு மாகாண அவைத்தலைவரின் மனைவி காலமாகியதால், பிரதி அவைத்தலைவரின் தலைமையில் சபை கூடியது. எனினும், இன்றைய தினம் முக்கிய விடயங்கள் குறித்து பேசப்படவில்லை.
இந்நிலையில், ஆளுநரின் அறிவிப்புகள், சபை அறிவிப்புகள், அறிக்கைகள் என்பன மாத்திரம் இடம்பெற்று சபை நடவடிக்கைகள் எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.