இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி தனது கணவர் ராஜ்குந்த்ராவுடன் சீனா சென்றார். அங்குள்ள முக்கிய பகுதிகளை சுற்றி பார்த்தார். பின்னர் மக்காவ் நகருக்கு சென்றார். அங்கு குத்துச்சண்டை போட்டி நடந்து வருகிறது. இப்போட்டியை காண ஷில்பா ஷெட்டி கணவருடன் அரங்குக்குள் சென்றார்.
ஹாலிவுட் நடிகர்கள் அர்னால்டு, சில்வஸ்டர் ஸ்டாலோன், ஸ்வார்ஸ் நேக்கர் போன்றோரும் குத்துச் சண்டையை காண வந்திருந்தனர். அர்னால்டை பார்த்ததும் ஷில்பா ஷெட்டிக்கு சந்தோஷம். அவர் அருகில் சென்று சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தார். பின்னர் அர்னால்டுடன் போட்டோவும் எடுத்துக் கொண்டார்.
அந்த போட்டோவை டுவிட்டரில் வெளியிட்ட அவர் அர்னால்டு, சில்வஸ்டர் பக்கத்தில் இருந்தது இனிமையான அனுபவம் என்று குறிப்பிட்டு உள்ளார்.