அரை றாத்தல் பாணும் பருப்பும் 150 ரூபாய்; பிளேன் ரீ 25 ரூபாய்!! உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலையும் அதிகரிப்பு!!

திங்கட்கிழமை முதல் வெதுப்பக உணவுப் பொருள்களின் விலைகள் அதிகரிக்கும் என்பதால் உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலையும் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சீனி மற்றும் ஏனைய அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலையை உயர்த்துவதற்கான அரசின் முடிவைத் தொடர்ந்து வெதுப்பக உற்பத்திகளின் விலையை உயர்த்துவது நியாயமானது.

பாண் மற்றும் பிற வெதுப்பக உற்பத்திப் பொருள்களின் விலையை அதிகரிப்பதற்கான பேக்கரி உரிமையாளர்களின் முடிவு அரசோ அல்லது பொதுமக்களையோ சிரமப்படுத்துவதில் கவனம் செலுத்தவில்லை என்று இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேலா சம்பத் கூறினார்.

அத்தியாவசிய தொழிலாளர்களுக்காக சிறிய அளவிலான கடைகள் மட்டுமே திறக்கப்பட்ட நிலையில், கோவிட்-19 நோய்த்தொற்றுக் காரணமாக பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

அதன்படி, கடைகளில் விற்கப்படும் அரை றாத்தல் பாண் மற்றும் பருப்பு கறி 150 ரூபாயாகவும், தேநீர் (பிளேன் ரீ) 25 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என்று இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேலா சம்பத் தெரிவித்தார்.

Related Posts