அருணோதய மாணவன் தேசிய மட்டத்தில் சாதனை

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையே தேசிய மட்டத்தில் நடைபெறும் தடகள விளையாட்டுப் போட்டிகளில் அளவெட்டி அரு ணோதய கல்லூரி மாணவன் என்.நெப் தெலி ஜொய்சன் கடந்த பதின்மூன்று வருட சாதனையை முறியடித்து தேசிய மட்டத்தில் புதிய சாதனையை பதிவு செய்துள்ளார்.

arunothaya-student

19 வயதுப் பிரிவினருக்கான கோலூன் றிப் பாய்தல் போட்டியில் இவர் நான்கு மீற்றர் 21 சென்ரி மீற்றர் உயரம் பாய்ந்து இந்த புதிய சாதனையை பாடசாலைகள் மட்டத்தில் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த 2002-ம் ஆண்டு மாதம்பை சேன நாயக்க மத்திய மகா வித்தியாலய வீரன் மதுரங்கா பெர்னாந்துவினால் நான்கு மீற்றர் தூரம் கோலூன்றிப் பாய்ந்து ஏற்படுத்திய சாதனையை இம்முறை அளவெட்டி அருணோதயக்கல்லூரி மாணவன் நெப்தெலி ஜோன்சன் முறியடித்து புதிய சாதனையை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts