அரியாலை கிழக்கில் மணல் அகழ்வதால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் ஆராய்வு!

அரியாலை கிழக்கில் சட்டவிரோத மணல் அகழ்வதால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் கொழும்பு புவிசரிதவியல் அளவை சுரங்கவியல் பணியக அதிகாரிகள் தலைமையில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

அண்மையில் அப்பகுதிக்கு விஜயம் செய்த புவிசரிதவியல் அளவை சுரங்கவியல் பணியக அதிகாரிகள் குழுவினர் அரியாலை கிழக்கில் சட்டவிரோத மணல் அகழ்வதால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் ஆராய்ந்தறிந்து கொண்டனர்.
areyalai-manal
இக்கலந்துரையாடலில் யாழ்.புவிசரிதவியல் சுரங்கம் கள உத்தியோகத்தர் நடேஸ்வரன் நல்லூர் பிரதேச செயலர் பா.செந்தில்நந்தனன், நல்லூர் பிரதேசசபை எதிர்க்கட்சித்தலைவர் அம்பலம் இரவீந்திரதாசன், நல்லூர் பிரதேசசபை உறுப்பினர் வ. சிறிகணேசா கிராம அலுவலர் சி.திருக்கேதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Posts