அரியாலையைச் சேர்ந்த வயோதிபர்கள் இருவருக்கே கோரோனா வைரஸ்!!

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டவர்களில் கோரோனா வைரஸ் தொற்று உள்ளதாக நேற்று அடையாளம் காணப்பட்ட இருவரும் முதியவர்களான ஆணும் பெண்ணும் என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

அரியாலையைச் சேர்ந்த 60 வயதுடைய ஆணுக்கும் 61 வயதுடைய பெண்ணுக்குமே கோரோனா வைரஸ் தொற்றுள்ளதாக பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டது.

இவர் இருவரும் கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதி அரியாலை தேவாலயத்தில் ஆராதனை நடத்திய சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகியவர்கள்.

அதனால் மார்ச் 22ஆம் திகதி பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு கண்காணிக்கப்பட்ட 20 பேரில் இவர்களும் உள்ளடங்குகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை இனங்காணப்பட்ட இருவருடன் நாட்டில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 237ஆக உயர்வடைந்துள்ளது.

Related Posts