இறக்குமதி மற்றும் உள்நாட்டு அரிசி வகைகளுக்கான சில்லறை விலைகள் நேற்று நள்ளிரவுமுதல் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதற்கமைய, இறக்குமதி செய்யப்பட்ட உள்நாட்டு அரிசி ஒரு கிலோ 70 ரூபாவாகவும், உள்நாட்டு உற்பத்தி அரிசி ஒரு கிலோ 80 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட பச்சை அரிசி ஒரு கிலோகிராம் 70 ரூபாவாகவும், உள்நாட்டு பச்சை அரிசி ஒரு கிலோகிராம் 78 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ சம்பா அரிசி 80 ரூபாவாகவும், உள்நாட்டு சம்பா அரசி 90ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரிசி விற்பனை தொடர்பாக ஏதேனும் மோசடி இடம்பெறுமாயின், 1977 என்ற இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு முறைப்பாடுகளைத் தெரிவிக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.