அரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயம்

அரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் அமுலாகும் வகையில் இந்த சில்லரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், இது தொடர்பான வர்த்தமானியை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, 1 கிலோ கீரி சம்பாவின் அதிகபட்ச சில்லரை விலை 125 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டரிசி மற்றும் சம்பா அரிசி ஒரு கிலோ 90 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பச்சை அரிசி ஒரு கிலோவின் அதிகபட்ச சில்லறை விலை 85 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

Related Posts