அராலி தெற்கில் இளம் குடும்பஸ்தர் மீது வாள் வெட்டு

அராலி தெற்கில் இளம் குடும்பஸ்தர் ஒருவரை வீட்டிற்கு வெளியில் அழைக்கப்பட்டு இன்று காலை 6 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினரால் வெட்டப்பட்டு கையிலும் முதுகிலும் துடையிலும் பலத்த காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளார். இதுகுறித்த தெரியவருவதாவது

இன்று காலை சில இனந்தெரியாத நபர்கள் இளம் குடும்பஸ்தரின் வீட்டிற்கு வந்து வீட்டாரை விசாரித்துவிட்டு அவரை வெளியில் வரவழைத்து வெட்ட முயற்சித்துள்ளார்கள் இதையடுத்து அவர் கத்திக்கொண்டு வீட்டைச் சுற்றி ஓடிய போது துரத்தி துரத்தி வெட்டியுள்ளார். இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்தவர் (சுப்பிரமணியம் பாலச்சந்திரன் (வயது-35)  3 பிள்ளைகளின் தந்தையும் ஆவார். இதுகுறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Related Posts