அரவிந்த்சாமி திரிஷா மோதல்!

கொடி படத்திற்கு பிறகு அதிரடி நாயகியாக உருவெடுத்த திரிஷா, தற்போது நடித்து வரும் ஒவ்வொரு படங்களிலுமே ஒவ்வொருவிதமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக, அரவிந்த்சாமியுடன் நடித்து வரும் சதுரங்க வேட்டை-2 படம் அப்படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ளது.

முதல் பாகத்தில் நட்டி நடராஜன் நடித்த ரோலை தொடர்கிறார் அரவிந்த்சாமி. ஆனால், அந்த கதைக்குள் ஒரு புது கேரக்டர் என்ட்ரி கொடுப்பதுதான் திரிஷாவாம்.

அந்தவகையில், படம் முழுக்க அரவிந்த்சாமி-திரிஷாவுக்கிடையே நடக்கும் தள்ளுமுள்ளுதான் இந்த படமாம். அதோடு, படத்தின் க்ளைமாக்சில் ஹீரோவும், வில்லனும் மோதுவது போன்று அரவிந்த்சாமியும்-திரிஷாவும் மோதிக்கொள்ளும் ஒரு சண்டை காட்சி உள்ளதாம்.

அந்த சண்டை காட்சியில் ஹாலிவுட் நடிகைகள் ரேஞ்சுக்கு அரவிந்த்சாமியுடன் தில்லாக மோதியிருக்கிறாராம் திரிஷா. சுமார் ஒரு வாரமாக படமாக்கப்பட்ட அந்த சண்டை காட்சியில் சில நாட்களில் ரோப்பில் தொங்கியபடி நடித்த திரிஷா, கொஞ்சம்கூட சோர்ந்து போகாமல் உற்சாகமாக நடித்திருக்கிறாராம்,.

Related Posts