அரண்மனை போன்று உருவாகும் அஜித்தின் புதிய வீடு

அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் ‘விவேகம்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், திருவான்மியூரில் அரண்மனை போன்ற ஒரு வீட்டை அஜித் கட்டி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த வீட்டை அதிக பொருட்செலவில் அரண்மனை போன்று கட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த வீட்டிற்குள்ளேயே உயர்தர உபகரணங்கள் கொண்ட நவீன ஜிம்மையும் அஜித் உருவாக்கவிருக்கிறாராம். இதற்கான பணிகளை அஜித்தின் மனைவி ஷாலினி மேற்பார்வையிட்டு கவனித்து வருகிறாராம். இந்த வீட்டில் கட்டிடப் பணிகள் கிட்டத்தட்ட 60 சதவீதம் முடிவடைந்துவிட்டதாம். விரைவில், புதுவீட்டில் மனைவியுடன் அஜித் குடிபுக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அஜித் தற்போது நீலாங்கரையில் உள்ள பங்களாவில் வசித்து வருகிறார். இங்கு பணிபுரியும் வேலையாட்களுக்கு தனியாக வீடு கட்டிக் கொடுத்து, அவர்கள் தினமும் வேலைக்கு வந்து செல்வதற்கு ஏதுவாக போக்குவரத்து ஏற்பாட்டையும் செய்துகொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts