சைட்டம் தனியார் வைத்திய கல்லூரிக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளது.
சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக நாளை 12 ஆம் திகதி முதல் எதிர்வரும் 15ம் திகதி வரை மாவட்ட ரீதியாக ஒருநாள் அடையாள பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக குறித்த சங்கத்தின் செயலாளர் டாக்டர்.நவீந்த சொய்சா தெரிவித்தார்.
அதன்பிரகாரம், நாளைய தினத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார்,முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் இந்த பணிபகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
சைட்டம் பிரச்சினையை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி குழுவின் அறிக்கையை எதிர்த்தே குறித்த பணிபகிஷ்கரிப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.