அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பு

மாலபே தனியார் மருத்துவக் கல்லுாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் இன்று காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

இந்த பணிப்புறக்கணிப்பிற்கு நுாற்றுக்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் ஆதரவு வழங்கியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் தெரிவித்தார்.

மாலபே தனியார் மருத்துவக் கல்லுாரியை மூடுமாறு கோரி இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related Posts