அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாட்டுக்கு எதிராக பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த பணிப்புறக்கணிப்புஎதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாக அச்சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூர் உடன்படிக்கை உள்ளிட்ட வைத்தியர்களுடன் தொடர்பற்ற அரசாங்கத்தின் உடன்படிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இப்பணிப்புறக்கணிப்பு அமையுமெனவும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் தமது பிரச்சினைகள் தொடர்பிலும் குறித்த பணிப்புறக்கணிப்பு தொடர்பிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்கூட்டியே அறிவித்திருந்த போதிலும் அவர் எந்ததொரு தீர்வையும் முன்வைக்கவில்லை எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆகையால் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்ளும் பொருட்டு பணிப்புறக்கணிப்பை எதிர்வரும் 3ஆம் திகதி மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம் என அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.