முன்னறிவிப்பு இன்றி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவிருப்பதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை செய்துள்ளது.
சிங்கபூருடனான வர்த்தக உடன்படிக்கை மற்றும் கொத்தலாவலை தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக உத்தேச சட்ட மூலம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்ப பீடத்தின் ஊடாக வழங்கப்பட்ட பட்டப்படிப்பை ரத்து செய்வதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது என இணைப்பாளர் லஹிரு வீரசேகர இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஊவா மாகாண தொழில்கோரும் பட்டதாரிகள் குழு ஒன்று, ஊவாமாகாண சபைக்கு முன்னால் இரண்டாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.