அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்றுகாலை 8 மணிமுதல் 24 மணி நேர வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. மருத்துவபீட மாணவ செயற்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத்தைகடத்த முயற்சித்தமை, வைத்திய சபையின் தலைவரை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள ஒழுங்கீனங்கள் உள்ளிட்ட சில முக்கிய விடயங்களை முன்வைத்தே குறித்த பணிப்புறக்கணிப்பு இடம்பெறவுள்ளதாக, அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் வைத்தியர் சமந்த ஆனந்த தெரிவித்தார்.
தொழில்சார் நிபுணர்களின் கேட்போர் கூடத்தில் நேற்றுதிங்கட்கிழமைநடைபெற்றஊடகவியளாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டுஉரையாற்றும் போதேஅவர் மேற்கண்டவாறுதெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மாலபேதனியார் மருத்துவகல்லூரிக்குபுதியமாணவர்கள் உள்வாங்குதலைதடைசெய்தல், இலங்கைவைத்தியசபையின் தற்போதையதலைவர் பதவிக்காலத்தைநீடித்தல் உள்ளிட்டபிரதானஐந்துகோரிக்கைகளுக்குஉரியதீர்வொன்றைவழங்குமாறுதொடர்ந்தும் அரசாங்கத்திடம் வலியுறுத்திவருகின்றோம்.
எனினும் இதுவரையில் அவற்றுக்கானஎவ்விததீர்வினையும் அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுக்கப்படவில்லை.
கடந்தவாரத்தில் அனைத்துபல்கலைகழகமாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் ராயன் ஜயலத்தினைசிவில் உடையில் வந்திருந்தசிலர் பலவந்தமாககைதுசெய்து இல என். பி 0410 எனும் இலக்கத்தகட்டினைகொண்டவௌ்ளைவேனில் கடத்தமுயற்சித்திருந்தனர். குறித்தவேன் யாருக்குசொந்தமானது,அதனுள் வருகைத்தந்தவர்கள் யார்?,அவர்களுக்குகைதுசெய்வதற்கானஉத்தரவைபிறப்பித்தது யார்?,அவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலானதொடர்புஎன்ன? என்பதுதொடர்பில் எவ்விதமானபதிலையும் அரசாங்கம் முறையாகதெரிவிக்கவில்லை.
அத்துடன் வைத்தியசபையின் தரத்தைகுறைப்பதற்கு அரசாங்கம் தீவிரமாக முயன்றுவருகின்றது. எமதுகோரிக்கைகள் தொடர்பில் எத்தனையோமுறைபேச்சுவார்த்தைநடத்தியும் அதற்கானபதில் எதுவும் அரசாங்கம் கொடுக்காமல் இருப்பதுமிகவும் வேதனையானவிடயமாகும்.
சைட்டம் தொடர்பில் எடுக்கவேண்டியஅடுத்தகட்டநடவடிக்கைகுறித்துஆராயஅரசமருத்துவர் அதிகாரிகள் சங்கத்தின் அவசரநிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படிநாடு முழுவதிலுமுள்ள அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளேளாம். இக்காலப்பகுதிக்குள்ளாவது ஜனாதிபதி உறுதியளித்ததன்படி நிரந்தர தீர்வொன்றை வழங்க முன்வருவார் என்று நம்புகின்றோம். மேலும் நாளை (இன்று)கொழும்பு விகாரமாதேவி புங்காவுக்கு அருகாமையில் சைட்டத்திற்கு எதிரான சகல அரச மற்றும் தனியார் நிறுவனங்களையும் ஒன்றிணைத்து பாரிய பாதயாத்திரையை ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளோம்.
எனினும்,வேலைநிறுத்தபோராட்டத்தின்போது மகப்பேற்று வைத்தியசாலைகள்,சிறுவர் வைத்தியசாலைகள்,சிறுநீரகசிகிச்சைமையம், புற்றுநோய் வைத்தியசாலைகள், டெங்கு நோயாளர்களுக்கான சிகிச்சை மற்றும் அவசரசிகிச்சை பிரிவு என்பன வழமைபோல் இயங்கும் என்றார்.