அரச வேலைவாய்ப்பை பெற தமிழ், சிங்கள மொழிகள் அவசியம் – மனோ வலியுறுத்தல்

எதிர்காலத்தில் அரச வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ள தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளும் அவசியமென அமைச்சர் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு அதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மொழியை கற்போம் மனதை வெல்வோம் வேலைத்திட்டத்தின் கீழ், மோதர பாடசாலைகளை மையப்படுத்திய மொழிக்கற்கை பயிற்சி, தேசிய மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) வட கொழும்பு இளைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், சிங்கள மாணவர்கள் தமிழ் மொழியை கட்டாயமாக கற்க வேண்டும். அத்தோடு வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள தமிழ் மாணவர்களுக்கு சிங்கள மொழி உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த காலத்தில் நாட்டில் அரச பயங்கரவாதம் காணப்பட்டது என்றும், இன்று அந்நிலை மாறி சுமூக சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மனோ சுட்டிக்காட்டினார்.

Related Posts