அரச முகாமைத்துவ சேவையில் மேலும் 3000 பேர் இணைப்பு!

அரச முகாமைத்துவ சேவையில் இந்த வருடத்தில் புதிதாக மூவாயிரத்திற்கும் மேற்பட்டோரை இணைத்துக் கொள்வதற்காக எதிர்வரும் 22ம் 23ம் திகதிகளில் இதற்கான போட்டிப் பரீட்சை நடத்தப்படவிருப்பதாக அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இதற்காக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். அனைத்து பரீட்சார்த்திகளுக்குமான பரீட்சை அனுமதி அட்டைகள் தற்பொழுது அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்தார்.

இரண்டு மாத காலப்பகுதிக்குள் இதற்கு நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டு முகாமைத்துவ சேவையில் நிலவும் வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்படும் என்று அரச கூட்டு சேவை பணிப்பாளர் நாயகம் கே.வி.பி.எம்.ஜி கமகே குறிப்பிட்டுள்ளார்.

Related Posts