அரச பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகும்

நாடாளாவிய ரீதியில் உள்ள தமிழ், சிங்கள அரச பாடசாலைகளுக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை (புதன்கிழமை) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் தவணைக்கான விடுமுறை கடந்த 5ஆம் திகதி வழங்கப்பட்டிருந்த நிலையில் நாளை முதல் மீண்டும் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், பாடசாலை சுற்றுச் சூழலை சுத்தம் செய்யும் நோக்குடன் விஷேட சிரமதான நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட உள்ளன. இதன்போது பழைய மாணவர்கள், பெற்றோர் மற்றும் நலன்விரும்பிகளின் உதவியை பெற்றுக் கொள்ளுமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

Related Posts