அரச சேவையாளர்களின் தொழிற்தரத்தை மையமாக கொண்டு அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் 2 ஆயிரம் ரூபா தொடக்கம் 16 ஆயிரம் ரூபா வரையிலான சம்பள அதிகரிப்பை மீண்டும் மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த சம்பள அதிகரிப்பானது இம்மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய தொழிற்சங்க முன்னணியின் தலைவர் சமன்ரத்ன பிரிய தெரிவித்தார்
கொழும்பில் அமைந்துள்ள அரச மருந்தாளர் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்