அரச திணைக்கள விருந்து நிகழ்வில் மது! ஆண்களுக்கு நிகராக பெண்களும் பங்கேற்பு!!

கிழக்கு மாகாணத்தின் அரச திணைக்களத்தில் மதுவுடன் கூடிய விருந்து நிகழ்வு ஒன்று நடைபெற்ற சந்தர்ப்பத்தில், குறித்த விருந்துபசார நிகழ்வில் அரச அதிகாரிகள் ஆண்களுக்கு நிகராக பெண்களும் மது போத்தலுக்கு முன்பாக அமர்ந்து இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

குறித்த புகைப்படம் கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச திணைக்களங்களில் பணி புரியும் அரச அதிகாரிகள் என தெரியவருகின்ற நிலையில், கிழக்கு மாகாணத்தின் இன்றைய நிலை பற்றிய சிந்தனை அனைவர் மத்தியிலும் அதிகம் பேசப்படுகின்றது.

மக்களை மது பாவனையில் இருந்து மீட்டெடுத்து நல் வழிப்படுத்த வேண்டிய அரச ஊழியர்கள் இவ்வாறு மதுப்பாவனையில் ஈடுபடுவது மக்கள் மத்தியில் வேதனையளிக்கும் செயலாக இருப்பதை சுட்டிக்காட்டுகின்றது.

ஆண்கள் மது அருந்தும் இடத்தில் பெண் அரச ஊழியர்களும் சேர்ந்திருந்து ஆதரிப்பது எதிர்கால காலாசாரம் எவ்வாறு பாதுகாக்கப்பட போகின்றது என்பது சமூகத்தில் மத்தியில் எழுந்துள்ள கோள்விகுறியாகவே உள்ளது.

கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட தொகையை விட மது பாவனைக்கு செலவு செய்த தொகை அதிகரித்திருக்கின்றது என்ற புள்ளி விபரத்தகவல் மூலம் ஊடகங்கள் வாயிலாக வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts