விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரிடம் அரசாங்கம் புதுப் பொறுப்பொன்றை வழங்கியுள்ளது.
நடைபெறவுள்ள வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான அரச தரப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரிக்கும் பொறுப்பு தற்போது அவரிடம் வழங்கப்பட்டுள்ளதாக அலரி மாளிகையின் முக்கிய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தில் வாழும் மக்கள் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளை தெளிவான முறையில் தான் இனம் கண்டுள்ளதாகவும், அதற்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்படும் என்றும் இது தொடர்பில் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரிக்கும் பணியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் சில சிங்கள அமைச்சர்களும் தயா மாஸ்டருக்கு ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.