அரச, தனியார் துறை ஊழியர்களுக்கான தேர்தல் வாக்களிப்பு விடுமுறை விபரம் வெளியானது

அரச , தனியார் துறைகளில் தொழில் புரியும் ஊழியர்களுக்கு அவர்களின் தொழில் நடைமுறைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்தல் விடுமுறைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேசிய தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.

அத்துடன் இதன்போது ஊழியர்களின் சம்பளம் மற்றும் தனிபட்ட விடுமுறை விதிகளுக்கு எந்தவித இழப்புகளுமின்றி அந்த விடுமுறைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரச மற்றும் தனியார்துறைகளில் பணியுரியும் ஊழியர்கள் அவர்களது தொழில் நிலையத்திலிருந்து வாக்களிப்பு நிலையத்திற்கிடையிலான தூரத்தை அடிப்படையாக கொண்டே இந்த விடுமறைகள் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.

அதனடிப்படையிலே வாக்களிப்பு நிலையத்திலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் அல்லது அதற்கு குறைந்த தூரத்தில் தொழில்புரியும் ஊழியர்களுக்கு அரைநாள் விடுமுறையும், 40 கிலோ மீட்டரிலிருந்து 100 கிலோ மீட்டருக்கு இடையிலான தூரத்தில் தொழில்புரிபவர்களுக்கு ஒரு நாள் விடுமுறையும், 100 கிலோ மீட்டரிலிருந்து 150 கிலோ மீட்டருக்கிடையிலான தொலைவில் தொழில்புரிபவர்களுக்கு ஒன்றரை நாள் விடுமுறையும், 150 கிலோ மீட்டருக்கும் அதிகமான தெலைவில் பணிபுரிபவர்களுக்கு இரு நாட்கள் விடுமுறைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேல குறிப்பிடப்பட்ட தூரங்களை விட அதிக தூரம் சென்று வாக்களிக்க நேரிடும் ஊழியர்களுக்காக மூன்று நாட்கள் விடுமுறைகள் வழங்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Related Posts