அரச காணியில் நாம் ஏன் குடியமரக்கூடாது?

Phone Bill Confusion-quctionஇராணுவத்தினர் அனுமதியின்றி எங்கள் காணிகளைப் பிடித்து வைத்திருக்கின்றபோது, நாங்கள் ஏன் அரச காணியில் அத்துமீறிக் குடியமரக் கூடாது.

இவ்வாறு கோப்பாயில் அரச காணியில் தங்கியுள்ள, வலி. வடக்கைச் சேர்ந்த மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அரச காணியில் மக்கள் தங்கியுள்ளமைக்கு எதிராகக் கோப்பாய் பிரதேச செயலாளரால் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையிலேயே மக்கள் இவ்வாறு கேள்வியயழுப்பியுள்ளனர்.

கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பூதர்மடம் பகுதியில், இராணுவத்தினர் அரச காணியில் நீண்டகாலமாக நிலை கொண்டிருந்தனர். குறித்த காணியிலிருந்து இராணுவத்தினர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியேறியிருந்தனர்.

இந்த நிலையில், வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து காணியில்லாமல் வாழ்ந்து கொண்டிருந்த சில குடும்பங்கள் குறித்த காணியில் குடியமர்ந்தன.

மேற்படி காணியில் கோப்பாய் பிரதேச செயலகத்துக்குரிய, பிரதேச செயலர் விடுதி கட்டவுள்ளதாகத் தெரிவித்து, குறித்த காணியில் குடியமர்ந்த மக்களை வெளியேறுமாறு கோப்பாய் பிரதேச செயலாளர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

அதற்கு அந்த மக்கள் தமக்கு அரச காணி ஏதாவது தந்தால் வெளியேறுவதாகத் தெரிவித்துள்ளனர்.

அதற்குப் பிரதேச செயலகத்தினர், ஊரெழுவிலுள்ள சுடலையாகப் பயன்படுத்தப்பட்ட அரச காணியைக் காண்பித்துள்ளனர்.

அதற்கு அந்த மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அத்துடன், தமது காணியில் (வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயம்) இராணுவத்தினர் எந்த அனுமதியுமில்லாமல் குடியிருக்கின்றனர். அவர்கள் எமது காணியைப் பிடித்து வைத்திருந்தால், நாங்கள் அரச காணியில் குடியிருப்பதில் என்ன தவறிருக்கின்றது என்றும் அவர்கள் கேள்வியயழுப்பியுள்ளனர்.

இதேவேளை குறித்த காணியில் குடியமர்ந்துள் மக்களை வெளியேற்றுவதற்காகக் கோப்பாய் பிரதேச செயலாளரால் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts