அரச கரும மொழிகள் அமைச்சின் அலுவலகம் கிளிநொச்சியில் திறந்து வைப்பு!

தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் வட.மாகாண அலுவலகம் கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி 155ம் கட்டைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குறித்த அமைச்சின் அலுவலகத்தினை நேற்று (திங்கட்கிழமை) அமைச்சர் மனோ கணேசன், சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரள உள்ளிட்டோர் இணைந்து திறந்து வைத்துள்ளனர்.

இதில் அமைச்சர் மனோ கணேசன் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், மாவை சேனாதிராஜா, சாள்ஸ் நிர்மலநாதன் செல்வம் அடைக்கலநாதன், சரவணபவன், மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் நோக்குடன் இலங்கை முழுவதும் எட்டு அலுவலகங்களை அமைக்கும் நோக்கிலான அமைச்சின் திட்டத்தின் முதலாவது அலுவலகம் இன்று கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கிளிநொச்சியில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார்.

Related Posts