அரச ஊழியர்கள் திங்கட்கிழமை முதல் வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டம் அறிமுகம்!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அரச ஊழியர்கள் இரண்டு வார காலத்திற்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அரச நிறுவனங்களை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பான உரிய நடைமுறைகளை அறிவிக்கும் சுற்றறிக்கையை அரச நிர்வாக அமைச்சு வெளியிடும் எனவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பும் வரை இரண்டு வார காலத்திற்கு இந்த வேலைத்திட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், பாடசாலைகளின் செயற்பாடுகள் தொடர்பிலும் வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு கல்வி அமைச்சுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

Related Posts