புதிய அரசாங்கத்தின் கீழ் அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை 25,000 ரூபாவாக அதிகரிக்கவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
குளியாபிடிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் அரச ஊழியர்களின் சம்பளத்தில் பத்தாயிரம் ரூபா அதிகரிப்பதாக கூறிய போதும் 7000 ரூபா மட்டுமே அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குருநாகல் மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்துக் களமிங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு அல்லது டெலோ சார்பில் அல்லாது சுயேட்சையாக போட்டியிட தான் முடிவெடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.