அரச ஊழியர்களுக்கு பகல் உணவுக்காக வழங்கப்படும் இடைவேளை நேரம் 30 நிமிடங்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக விசேட சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
உள்நாட்டலுவல்கள், உள்ளுராட்சி சபைகள் அமைச்சின் செயலாளர் ஜே.தடல்லகேயினால் சகல அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் இவ்விசேட சுற்று நிருபம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுமக்களுக்கு சிறந்த, வினைத்திறன் மிக்க அரச சேவையை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், புதன்கிழமை பொதுமக்கள் சந்திப்பு தினம் என்பதனால் அன்றைய தினம் அவசியமான காரணங்கள் தவிர்த்து, விடுமுறை பெற்றுக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் அச்சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே, அரச ஊழியர்களின் பகல் உணவுக்காக வழங்கப்படும் இடைவேளை நேரம் ஒரு மணித்தியாலமாக காணப்பட்டது. இதுவே, தற்பொழுது 30 நிமிடமாக குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.