அரச அதிகாரிகளுக்கு எங்களாலும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும் – சபையில் சீ.வீ.கே முழக்கம்

CVK-Sivaganamநிதி நியதிச்சட்டம் இன்று வடக்கு மாகாண சபையில் எடுத்துக் கொள்ளப்பட்டு விவாதம் நடைபெறுகின்ற நிலையிலும் கூட பிரதம செயலாளர் பிரசன்னம் ஆகவில்லை எனவே இதற்கு சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபையில் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உறுப்பினர்கள் மேலும் தெரிவிக்கையில், ஆளுநருக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகள் தனியான இராஜாங்கம் நடாத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.

நாங்கள் தமிழர்கள் தமிழர்களின் உரிமைகளுக்கு போராடிக்கொண்டு வரும் நிலையில் இவ்வாறு செயலாளர்கள் மேற்கொள்வது மிகவும் மோசமான விடயம் எனவே இதற்கு ஒரு தீர்வு மிக விரைவில் எடுக்கப்பட வேண்டும்.

வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போதும் கூட பிரதம செயலாரும், கணக்காளரும் பிரசன்னமாகி இருக்கவில்லை.அதுபோல இன்றும் அவர் வரவில்லை. அத்துடன் ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்களும் காலையில் வந்து விட்டு மதிய இடைவெளியுடன் போய் விட்டனர்.

எனவே இவ்வாறான நடவடிக்கைகளை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இது குறித்து அவைத்தலைவர் தெரிவிக்கையில், இன்றைய அமர்வு மிகவும் வரலாற்று முக்கியத்தவமானது. முதலமைச்சரின் செயலாளர் மட்டுமே இருக்கின்றார்.

நேற்யைதினம் இன்றைய அமர்வு குறித்து அறிவிக்கப்பட்டதுடன் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் அவர் சமுகமளிக்கவில்லை. எனினும் இந்த அமர்வு உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இருப்பினும் முதலமைச்சரோடு பேசி இன்றைய அமர்வு நடைபெறுகின்றது . எனவும் அவரையும் சபைக்கு வருமாறு அழைக்கப்பட்டது.

எமது அதிகாரிகளை நாங்கள் நேசிக்கின்றோம் ஆனால் அவர்கள் எங்களை நேசிக்கவில்லை. அண்மையில் உயர் அதிகாரி ஒருவர் எனக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதில் இறுதியில் பட்டியல் படுத்தப்பட்டு சில விடயங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதில் 10 மாதங்களாகியும் நிதி சட்டம் இல்லாது காலம் விரையம் செய்கிறது என்று இருந்தது.

அதனையடுத்து குறித்த அதிகாரியுடன் தொடர்பு கொண்டு வடக்கு மாகாண சபை உயர்சபை அது குறித்து கருத்து தெரிவிக்க உரிமை கிடையாது என்று கூறினேன். இது தான் அதிகாரிகள் மனதிலும் உள்ளது போதும் சிறப்பு உரிமைமீறல்களுக்காக நடவடிக்கை எடுக்கலாம்.

இதனை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை போலும். நாங்கள் எந்த அளவிற்கு புரிந்துணர்வுடன் இலக்கு நோக்கி நகர்கின்றோம் என அவர்கள் புரிந்து கொள்ளவில்லை .

நிர்வாகத்தில் நடைமுறை சட்டம் என்பவற்றில் மூத்தவன் நான். அனைத்தையும் தெரிந்தவன் நான் நீங்கள் ஒத்துழைக்க வேண்டும் தவறும் பட்சத்தில் எவ்வாறு அவர்களை ஒழுக்காற்று முறையில் கையாள வேண்டும் என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது.

சட்ட ரீதியாக விதிகள் ரீதியாக கையாள வேண்டியது அவைக்கு உண்டு. சிறப்பு உரிமையினையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உண்டு . எனினும் ஆலோசனை கிடைக்க விடாலும் எங்களால் செய்ய வேண்டும். எங்களை நீங்கள் தோற்கடிக்க முடியாது நாங்களே வெற்றி பெறுவோம் என்பதையும் இங்கு அரசியல் வேறுபாடு இன்றி தெரியப்படுத்துகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts