அரசு திட்டமிட்டிருந்தால் உயிர்ப்பலிகளை தடுத்திருக்கலாம்

இலங்கையில் பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்லையில் மண்சரிவில் புதையுண்டுள்ள தேயிலைத் தோட்டக் குடியிருப்பு பகுதி, மண்சரிவு அபாயம் உள்ள பிரதேசம் என்று பல ஆண்டுகளுக்கு முன்னரே எச்சரிக்கப்பட்டிருந்த நிலையிலும், அதிகாரிகள் அந்தப் பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியேற்றத் தவறியிருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மலையகத் தோட்டங்களில் வீடமைப்புகளின் போது, பாதுகாப்பான இடங்கள் தேர்ந்தெடுக்கப்படாமையும் மண்சரிவு அபாயங்களில் உயிரிழப்புகள் ஏற்படக் காரணம் என்று இலங்கையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தின் இயக்குநர் எஸ். விஸ்வலிங்கம் கூறினார்.

Related Posts