சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு மே மாதத்திலிருந்து அரசு ஊழியர்கள் அவர்கள் அலுவலகக் கணினியில் இருந்து இணையத்தைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட உள்ளது.
இந்த நடவடிக்கையின் நோக்கம் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ள சூழலில், பணி தொடர்பான மின்னஞ்சல்கள் மற்றும் பகிரப்படும் ஆவணங்களின் தகவல்கள் கசியும் சாத்தியக்கூறைத் தடுப்பதே என “தி ஸ்ட்ரெயிட் டைம்ஸ் “என்னும் செய்தித்தாள் தெரிவிக்கிறது.
அரசாங்க ஊழியர்கள் தங்களின் பணி குறித்து எந்த தகவலும் தங்களின் சுய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புக்கொள்வதற்கும் தடை விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சிங்கப்பூர் மக்கள் தங்கள் அதிர்ச்சி மற்றும் அவநம்பிக்கையை இணையத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நடவடிக்கை சிங்கப்பூர் தொழிட்நுட்பத்தில் சிறந்து விளங்கும் தேசம் என்று தன்னைத்தானே விளம்பரப்படுத்திக்கொள்ளும் முன்முயற்சிக்கு மாறானது என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது மாதிரி பணி குறித்த முக்கிய தகவல் என்று அதிகம் தொடர்பில்லாத ஆசிரியர்களுக்கும் இந்த நடவடிக்கை பொருந்தும் என்பது மிகவும் தீவிரமான நடவடிக்கை எனவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.