அரசும் இராணுவமும் தேவையற்ற தலையீடு – முதலமைச்சர்

vicky0vickneswaranஇறந்த உறவுகளை நாம் நினைவுகூர்ந்தால் அவர்கள் எழும்பி வந்துவிடுவார்களோ என்ற பயத்தினால்தானே என்னவோ இலங்கை அரசு தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை அனுஷ்டிப்பதற்கு தடைவிதிப்பதாக வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வின் ஆரம்பத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டது.இதில் நினைவேந்தல் உரையை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

2009 ம் ஆண்டு மே மாதம் 18 ம் திகதி எமது மக்கள் எத்தனையே பேர் எப்படி,எங்கு வைத்து கொள்ளப்பட்டார்கள் என்பதை சர்வதேச சமூகம் ஆராய்ந்து விரைவில் எங்களுக்க விடையளிக்கும் நாங்கள் உயிரிழந்த எங்கள் உறவுகளை நினைவு கூருதல் என்பது எங்கள் மனநிலையின் வெளிப்பாடு. என்றார்.

Related Posts