அரசிற்கு மீண்டும் எச்சரிக்கை

பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய உறுதி மொழிகளை சரிவர நிறைவேற்ற தவறினால் மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அரச தனியார் தொழிற்சங்கங்களின் ஒன்றிணைப்பு தெரிவித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய எழுத்து மூல உறுதி மொழியையடுத்து இன்று மேற்கொள்ளப்படவிருந்த வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டதாக அதன் ஒருங்கிணைப்பாளர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

இதன் காரணமாக இன்றைய தினம் வழமைபோன்று அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் அலுவல்கள் இடம்பெறுகின்றன.

எவ்வாறாயினும் ஏற்கனவே அறிவித்தது போன்று இன்றைய தினம் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் கோரிக்கைகளுக்கு இதுவரை சரியான பதில்கள் கிடைக்கவில்லை என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக 08 அரச வங்கிகளினதும் 12 தனியார் வங்கிகளினதும் ஊழியர்கள் இன்றைய தினம் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதவிர வரவு செலவு திட்டத்தை அடிக்கடி திருத்துவதை தவிர்த்து மக்களுக்கு நிவாரணங்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

அவ்வாறில்லாவிட்டால் அரசுக்கு எதிராக பாரிய போராட்டங்களை நடத்தப் போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

Related Posts