அரசியல் வேறு அபிவிருத்தி வேறு என்பதை கருத்தில் கொண்டு மக்கள் நலன்சார்ந்த அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்றய தினம் (13) இடம்பெற்ற மாவட்டங்களின் அபிவிருத்தி குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாண மக்களின் நலன்களுக்காகவும், பகுதியின் அபிவிருத்திக்காகவும் நாம் நிதிகளை பெற்றுத் தந்துள்ளோம்.
ஆனாலும், பெற்றுத் தந்த நிதிகளுக்கு அமைவாக எவ்விதமான அபிவிருத்தி;களும் முன்னெடுக்கப்படவில்லை.
இந்நிலையில் அபிவிருத்தி வேறு அரசியல் வேறு என்பதைக் கருத்தில் கொண்டும் அரசியலுக்கு அப்பால் மக்கள் நலன்சார்ந்து செயற்பட வேண்டுமென வடக்கு மாகாண சபையின் ஆளுங்கட்சிக்கு ஜனாதிபதி அவர்கள் பகிரங்க வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
யாழ்.மாவட்ட முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் – ஜனாதிபதி
வடக்கு அபிவிருத்திக்குழு கூட்டம்; த.தே.கூ புறக்கணிப்பு
யாழ் ஊடங்களுக்கு அனுமதி மறுப்பு!
ஜனாதிபதி தலைமையிலான வடமாகாண அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் சி.வி இல்லை
யாழில் 96% வீடுகளுக்கு மின்வசதி – ஜனாதிபதி
கிளிநொச்சி நகரின் பிரதான மின்விளக்குகளை சூரியமின்கல விளக்குகளாாக மாற்ற ஜனாதிபதி உத்தரவு.