அரசியல் விஞ்ஞான வினாத்தாளில் அரசியல் புகுந்தது

நடந்து முடிந்துள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் அரசியல் விஞ்ஞான இரண்டாம் பகுதி வினாத்தாளில், அரசியல் புகுந்து விளையாடிவிட்டதாக அப்பாடத்துக்கான பரீட்சையில் தோற்றிய பரீட்சார்த்திகள் விசனம் தெரிவித்தனர்.

இரண்டாம் பகுதிக்கான வினாத்தாளில் கேட்கப்பட்டிருந்த 7 மற்றும் 8ஆம் வினாக்கள் இரண்டும், தற்போதைய அரசாங்கத்தை இலக்குவைத்தே கேட்கப்பட்டிருந்ததாக அம்மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அந்தக் கேள்விகள் ஒன்றில், அரச ஊழியர்கள், இலஞ்சம் மற்றும் ஊழலில் ஈடுபடுகின்ற போது, அவற்றைத் தடுப்பதற்கு தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? என்று கேட்கப்பட்டுள்ளது.

இரண்டாவது கேள்வியில், தற்போதைய தேசிய அரசாங்கத்தின் கீழ், இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையின் அடிப்படை அம்சங்கள் குறித்து கருத்துரைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

அரசியல் விஞ்ஞான பாடத்தில் பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகளில் பலர், அரசாங்கத்தின் பிரச்சினையானது, பரீட்சைகள் திணைக்களத்தின் கேள்விகளாகிவிட்டன என்றும் விசனம் தெரிவித்துக்கொண்டனர்.

Related Posts