அரசியல் கைதிகள் விவகாரம் – கூட்டமைப்பின் கோரிக்கைக்கு பிரதமர் பதில்!

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து தொடர்ந்தும் பேச்சு நடத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைச் செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

இதற்கு பதில் வழங்கிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க,

“நான் அறிந்தவகையில் 2001 ஆம் ஆண்டு, பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாக பல விடுதலைப் புலி உறுப்பினர்களை நாம் விடுவித்துள்ளோம்.

அதன் பின்னர் வந்த அரசாங்கங்களும், கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை விடுதலைச் செய்துள்ளது. 2015 ஆம் ஆண்டின் பின்னரும் பெருமளவிலானோரை நாம் விடுவித்துள்ளோம்.

தற்போதுள்ள 100 பேரில் கொலைக் குற்றச்சாட்டில் பலர் தண்டனைப் பெற்றுள்ளனர். பலர் தொடர்பில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இதில் பலர் எங்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று கூறி வருகின்றனர். இது தொடர்பில் நாம் மீண்டும் கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை எடுக்கவேண்டும்.

உண்மையில் இதனை நீதியமைச்சரிடம்தான் கேட்க வேண்டும். ஆனால் இன்று அவர் நாட்டில் இல்லை.” என கூறினார்.

Related Posts