அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பில் தீர்மானம் இல்லை

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்த, ஜனாதிபதியுடனான பேச்சுவார்ததையில் தீர்மானம் எதுவும், எட்டப்பட வில்லை என, தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

கூட்டமைப்பின் தலைவர், சம்பந்தர் மற்றும் சுமந்திரன் ஆகியோர் நேற்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதியை, நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்தநிலையில் குறித்த இந்த சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிடும் போதே கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 14ஆம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுட்டுள்ளனர்.

இந்தநிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Related Posts