அரசியல் கைதிகள் என எவரும் இல்லை!

போட் சிட்டி எனப்படும் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்துடன் இலங்கை முன்னோக்கி செல்ல எதிர்பார்த்துள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் சீனாவின் முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்ய வருமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

சுவிஸர்லாந்தில் நேற்று ஆரம்பமாகியுள்ள உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ள அங்கு சென்றுள்ள, ரணில் விக்ரமசிங்க, ஊடகவிலயாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே இவ்வாறு கூறியுள்ளார்.

அத்துடன் இலங்கையில் இனி தமிழ் அல்லது சிங்கள அரசியல் கைதிகள் என எவரும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெரும்பாலானோர் நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் விடுதலை செய்யப்படலாம் எனவும் பிரதமர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts