அரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா?- கைதிகள் அமைப்பு சந்தேகம்

யுத்தத்தின்போது கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் உயிருடன் இருக்கின்றார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக, சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பினர் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற யுத்த வெற்றியின் ஒன்பதாவது ஆண்டு நினைவுத் தினத்தின்போது, தமிழ் அரசியல் கைதிகள் என்று எவரும் சிறையில் இல்லையென அரசாங்கத் தரப்பின் கருத்தானது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் சிறையில் இதுவரை காலமும் தடுத்து வைக்கப்பட்ட சிறைக்கைதிகள் உண்மையில் இன்று உயிரோடு இருக்கின்றார்களா என்பதில் தற்போது மக்கள் மத்தியிலும் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஆட்சியிலுள்ள நல்லாட்சி அரசாங்கம் அரசியல் கைதிகள் தொடர்பில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை எனவும் சிறைக் கைதிகள் அமைப்பு குற்றஞ் சாட்டியுள்ளது.

அரசாங்கம் தெற்கிற்கு ஒரு நீதியையும் வடக்கிற்கு மற்றுமொரு நீதியையும் கடைப்பிடித்து வருகின்றமையே தற்போது காணக் கூடியதாக உள்ளதாகவும் அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Related Posts