அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி கிளிநொச்சியில் சங்கிலிப் போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறும், அவர்களது உண்ணாவிரதப் பேராட்டத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கிலும் கிளிநொச்சியில் சங்கிலிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

vanni-kili

இந்தப் போராட்டம் இன்று வியாழக்கிழமை காலை 8.10 அளவில் ஆரம்பமாகியுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகள் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ன.

இதற்கமைய கிளிநொச்சி திரேசம்மா தேவாலயத்தில் இந்த கவனயீர்ப்பு பேரணி ஆரம்பமாகி, நகர் பிள்ளையார் கோவில் வரை சென்றடைந்து, அங்கு சர்வமத பிரார்த்தனை இடம்பெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்தே சங்கிலிப் போராட்டம் நடைபெறவுள்ளது.

Related Posts