அரசியல் கைதிகளை விடுதலை: அரசின் இழுத்தடிப்பால் மனித நேயம் கேள்விக் குறியாகியுள்ளது – சுமந்திரன்

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் அரசாங்கம் தொடர்ந்தும் ஏன் இழுத்தடிப்புகளை செய்து வருகின்றது என தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் இவ்வாறான செயற்பட்டால் நல்லாட்சி அரசாங்கத்தில் மனித நேயம் கேள்விக் குறியாகியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் மிக நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் அரசாங்கம் ஏன் இழுத்தடிப்புகளை செய்து வருகின்றது.

அத்துடன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 100 க்கும் அதிகமான தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி மாற்று சட்டத்தை கொண்டுவருவதாக சர்வதேசத்திடம் அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிக்கு அமைய அரசியல் கைதிகளும் விடுதலை செய்ய வேண்டும்” எனவும் சுமந்திரன் மேலும் தெரிவித்தர்.

Related Posts