தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளில் பாரிய குற்றங்களுடன் தொடர்பில்லாதவர்களை பிணையில் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இவர்களை முற்றாக விடுதலை செய்யவில்லை எனவும் நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
சுமார் 60 சந்தேகநபர்களை இவ்வாறு நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவர்களை விடுவித்தமையானது பாரிய தவறு என சிலர் அர்த்தம் கற்பிக்க முற்படுவதாகவும் பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் பாரிய குற்றங்களுடன் தொடர்பில்லாதவர்கள் எனவும் நீதி அமைச்சு கூறியுள்ளது.
அதேபோல் 2010ம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றம்சுமத்தப்பட்ட 140 பேர் சட்டமா அதிபர் வழங்கிய உத்தரவுக்கு அமைய பிணையில் விடுவிக்கப்பட்ட சம்பவத்தை அரசாங்கத்தின் மீது குற்றம்சுமத்துபவர்களுக்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.