அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முழுமையான புறக்கணிப்புக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அழைப்பு

கடந்த காலப்பகுதியில் ஸ்ரீலங்கா அரசினால் கைது செய்யப்பட் பல நூற்றுக் கணக்கான தமிழர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

யுத்தம் முடிந்து ஆறு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் அவர்கள் விடுதலை செய்யப்படாது தொடர்ந்தும் சிறைகளில் வாடுகின்றனர். அவர்கள் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த மாதம் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டபோது அவர்களது போராட்டத்திற்கு ஆதரவாக வடக்கு கிழக்கு எங்கும் போராட்டங்கள் நடைபெற்றபோது அரசியல் கைதிகளை நவம்பர் 07ல் விடுவிக்க முடியும் என்ற வாக்குறுதிகள் வழங்கப்பட்டு போராட்டத்தை கைவிடுமாறு கோரப்பட்டிருந்தது. எனினும் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிப்பதற்கு நடடிவக்கைகள் எடுக்கப்படாது தொடர்ந்தும் ஏமாற்றும் செயற்பாடுகள் நீடிக்கும் நிலையில் மீண்டும் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

அவர்களது போராட்டம் நியாயமானது என்ற அடிப்படையில் அவர்களது போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 13-11-2015 அன்று யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் இயல்பு நிலை தவிர்ப்புக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

அன்றய தினம் வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மற்றும் உயர்கல்வி நிறுவனங்களை மூடியும், போக்குவரத்துச் சேவைகளை நிறுத்தியும் ஒத்துழைக்குமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

இவ்வாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts